தொடர் சிகிச்சையில் கருணாநிதி : விரைவில் பேச தொடங்குவார்?

புதன், 7 பிப்ரவரி 2018 (11:37 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் விரைவில் அவர் பேசு தொடங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
முதுமை மற்றும் உடல் நலக் கோளாறுகள்  காரணமாக, திமுக தலைவர் தொடர் ஓய்வில் இருக்கிறார். மேலும், சளித்தொந்தரவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க அவரது தொண்டையில் டிராக்கியாஸ்டமி கருவி பொருத்தியிருப்பதால் அவரால் பேச முடியவில்லை. தற்போது, அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அவ்வப்போது அவரை சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர்.
 
தற்போது அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், டிரக்கியாஸ்டமி கருவியை அகற்றுவது பற்றி மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு கருணாநிதிக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் முடிவில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதன் எதிரொலியாகவே, கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் அவரின் பற்கள் சோதிக்கப்பட்டது. மேலும், நேற்றிரவு கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வயிறு உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களுக்கான சோதனைகளும் நடைபெறவுள்ளன. அவை அனைத்தும் முடிந்த பின், அவரது தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிரக்யாஸ்டமி கருவி அகற்றப்படும் எனத் தெரிகிறது.
 
எனவே, விரைவில் அவர் பேசத் தொடங்குவார் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிது. இந்த செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்