நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகை விஜயலட்சுமி

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:43 IST)
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு துணை ஆணையர் உமையாள், ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து   நேரடி விசாரணை செய்தனர்.

நேற்று   நடைபெற்ற 8 மணி நேர விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பணவர்த்தனை, ஓட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜயலட்சுமி போலீஸிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தி, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய  முடிவு செய்யப்பட்டது.
.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட மகிளா  நீதிமன்றத்தில்  நடிகை விஜயலட்சுமி  ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவர் நீதிபதி பவித்ரா முன்பு இன்று  ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், 'சீமானுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், சீமான் சொல்வது போல தேர்தலுக்கும், புகாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை'' என்று தமிழர் முன்னேற்றபடை தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரில் வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்