முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. ரூ.127 கோடி ஊழல் செய்துள்ளதாக புகார்..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (11:17 IST)
ரூபாய் 127 கோடி ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
திமுக அரசு தொடங்கியதிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் சுமத்தப்பட்டு வருகிறது என்பதும் அது குறித்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சொத்துக் குறிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக முன்னால் அமைச்சர் காமராஜ் சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. 
 
810 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் 127 கோடி ஊழல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்