விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது: நீதிமன்றத்தில் வழக்க்கு தொடுத்த திமுக வேட்பாளர்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (22:13 IST)
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக வேட்பாளராக சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் அவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்று தனது பணிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்
 
விராலிமலையில் அதிமுகவின் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் EVM எந்திரம் மற்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட எண்களில் மாறுபாடு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்