மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (11:11 IST)
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த மனுவில் இந்த ஆண்டு கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீர் நிலுவை இருப்பது குறித்தும் முறையீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4 மாநிலங்களின் நலன் கருதி வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அவமதித்துவிட்டதாக தமிழக அரசு தாக்கல் செய்யும் இந்த மனுவுக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்ல போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் முதல்முறையாக மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு செயல்படுவதை அரசியல் விமர்சகர்கள் பெரும் மாற்றமாக பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்