நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு: தடுப்பூசி குறித்து சர்ச்சைக்கருத்து!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:10 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் காலமானதை அடுத்து அவர்  தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் காலமானார் என சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை நடிகர் மன்சூரலிகான் கூறினார்
 
தடுப்பூசி காரணமாக நடிகர் விவேக் மரணம் என அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பு, பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஏற்கனவே முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்துள்ளார் என்பதும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் வடபழனி போலீசார் மன்சூர் அலி கான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்