மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (12:55 IST)
தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது தடுப்பூசி எதற்கு என்றும் தடுப்பூசியை யார் கேட்டார்கள் என்றும் கூறினார். மேலும் கொரோனா என்பதே இல்லை என்றும் கொரோனா இருப்பதாக அரசு மத்திய மாநில அரசுகள் நாடகம் ஆடுவதாகவும் தடுப்பூசி தேவையில்லை என்றும் தடுப்பூசியால் ஆபத்து வரும் என்று சரமாரியாக புகார் அளித்தார்
 
அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் ’தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூரலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்று கூறினார். மேலும் ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்