பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு போராட்டம்: 137 பேர் மீது வழக்குப்பதிவு

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (08:27 IST)
பரந்தூரில் அமைக்கப்பட இருக்கும் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக அந்த பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது போராட்டக்காரர்கள் 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டக்குழு மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் என 137 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிந்தது எனவும் தெரிகிறது.

முன்னதாக கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பதும்,  புதிய விமான நிலையம் அமைக்க,  நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசு வெளியிட்டது என்பதும் தெரிந்ததே

காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பையும் நேற்று அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலம் குறித்து  ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமைவெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர் ஆர் கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோவில் பின்புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலம் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்