பெண் பயணியை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்கு!

Sinoj

வியாழன், 22 பிப்ரவரி 2024 (16:43 IST)
தர்மபுரி மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த பெண்ணை பாதியிலேயே இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் இருவர் மீதான புகாரை தொடந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
தருமபுரி மாவட்டம்  நவலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை( 59). இவர் அப்பகுதியில் மாலை நேரத்தில் மாட்டிறைச்சி பொறித்து விற்பனை செய்து வருகிறார்.
 
நேற்று முன்தினம் அரூரில் இருந்து நவலை செல்லும்போது அரூர் அருகே பாத்திரத்தில் மாட்டிறைச்சி  வைத்திருந்த பாஞ்சாலை பேருந்தில் இருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாதியிலேயே இறக்கிவிட்டனர்.
 
இதனால் பாஞ்சாலை  3கி.மீ., தூரம் நடந்தே ஊருக்கு வந்துள்ளார். இதுகுறித்து  போக்குவரத்துத்துறைக்குப் புகார் சென்ற நிலையில், பெண்ணை பாதியிலேயே இறக்கிவிட்ட ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவரையும் சஸ்பெண்ட் செய்து  நேற்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீலம் பண்பாட்டு மையமும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், அரூர் அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பேருந்தில் இருந்து பெண் பயணியை இறக்கிவிட்ட ஓட்டு நர் சசிகுமார் மற்றும்  நடத்துநர் ரகு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்