காவிரி விவகாரம்- இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!

Sinoj

வியாழன், 22 பிப்ரவரி 2024 (13:14 IST)
காவிரி நதி நீர் பிரச்சனை பற்றி முழுமையான நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
தமிழ் நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில், காவிரி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  பேசினார்.
அதில், அதிமுக ஆட்சியில் மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அனுமதிக்கவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் அனுமதி அளித்துள்ளனர்.
 
காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  தமிழ்நாடு அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டு காலம் போராடு பெற்றத் தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
 
தமிழ்நாடு அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் சூழல்  உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்