நீட் தேர்வை ரத்து.. மாணவர்களிடம் கட்டாய கையெழுத்தா? நீதிமன்றத்தில் முறையீடு..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:09 IST)
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திய திமுக கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். 
 
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக  ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு தாக்கல் செய்துள்ளார். 
 
மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்திய நிலையில் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து அடுத்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்