கமல்ஹாசனிடம் ரூ.100 கோடி வாங்காமல் விடமாட்டேன்: கிருஷ்ணசாமி

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (22:59 IST)
கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியால் ஆரம்பம் முதலே பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக காயத்ரி கூறிய 'சேரி பிஹேவியர்' என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



 
 
இதுகுறித்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தாலும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்தபோது, 'சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு கமல் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக தெரிவித்தார்.
 
இந்த நிலையில் தான் கொடுத்த இரண்டு நாட்கள் கால அவகாசம் முடிந்துவிட்டதாக கூறிய கிருஷ்ணசாமி, கமல்ஹாசன், காயத்ரி மற்றும் விஜய் டிவி ஆகியோர்கள் மன்னிப்பு கேட்காததால் ரூ.100 கோடி அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளதாக கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதற்கு கமல்ஹாசன் வரும் சனி, ஞாயிறு அன்று நிகழ்ச்சியில் விளக்கம் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்