மதுரை விமான நிலையத்தில் நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசி வீடியோ பதிவிட்ட ராஜேஸ்வரன் என்பவரை எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பாளர் தாக்கியதாக கூறப்பட்டது
இந்த நிலையில் ராஜேஸ்வரன் என்பவரின் புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது தரப்பில் உள்ள ஐந்து பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன் உள்பட ஐந்து பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.