மெதுவாக சென்ற லாரி மீது பேருந்து மோதி விபத்து

வியாழன், 4 மே 2023 (16:44 IST)
எகிப்து நாட்டில் சாலையில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

எகிப்து நாட்டின் எல் வாடி கில் ஹிடிட் என்ற மாகாணத்தில் இருந்து  நேற்றிரவு தலைநகர் கெய்ரோவை நோக்கி ஒரு  பேருந்து சென்றுகொண்டிருந்தது.

அந்தப் பேருந்தில் 45 க்கும் மேற்பட்ட  பயணிகள் பயணித்தனர்.  இரவுவேளையில் நெடுஞ்சாலையில் பேருந்து கொண்டிருக்கும்போது, சாலையின் முன்னே மெதுவாய் சென்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியது.

இந்த விபத்தில்  பேருந்தில் பயணித்த 14 பேர் உயிரிழந்தனர்.  25 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற போலீஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரனை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்