மாற்றுத்திறனாளி நீச்சல் சாம்பியனின் தாய் குறித்து புத்தகம்!

ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (12:29 IST)
முதல் முறையாக பல சவால்களை எதிர்கொண்ட  மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீ ராமின் தாய் பற்றி புத்தகம் வெளியிட்டப்பட்டது

கடந்த 2018ம் ஆண்டு பண்டிச்சேரி to கடலூர் செல்லும் வழியில் சுமார் 5 கி,மீட்டர் வரை தனது கைகளை மட்டும் பயன்படுத்தி நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு  ஸ்ரீ ராமிற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார். மேலும், இவர் கின்னஸ் சாதனை படைத்த ஷோபானா திமான் அவர்கள்  நடத்திய 10க்கும் மேற்பட்ட பேஷன் ஷோக்களி்ல் கலந்துகொண்டுள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமின் அம்மா வனிதா பற்றி புத்தகம் வெளியிட்டப்பட்டது. இந்த பத்தகத்தை டாக்டர் அர்ணேஷ் கார்க் எழுதியுள்ளார். வண்டலூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் வள்ளலார் ஐ.ஏ.எஸ் வெளியிட மகேஷ் அகர்வால் ஐபிஎஸ் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய ஸ்ரீ ராமின் தாயாரான வனிதா, எனது மகனை இந்த சமுதாயத்தில் வளர்ப்பதற்கு பல சவால்களை எதிர்கொண்டேன், தற்போது அவன் செய்யும் சதனைகள், நான் ஆரம்ப காலத்தில் பட்ட வேதனைகள், கஷ்டங்களுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது, தன்னை பற்றிய புத்தகம் வெளியாகி இருப்பது பெருமையாக இருக்கிறது. இதை நான் கனவில் நினைத்து பார்க்கவில்லை, இனி மாற்றத்திறனாளி குழந்தைகளை தெய்வத்தின் குழந்தைகள் என்று நினைத்து அவர்களுக்கு எந்தொரு துன்பத்தையும் கொடுக்காமல் சக மனிதர்களாக அம்மாக்கள் வளர்க்க வேண்டும் என்றார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்