தமிழகம் முழுவதும் 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (10:13 IST)
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சம்பள உயர்வு குறித்து தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நேற்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. ஒரு சில பேருந்துகளை ஓட்டுனர்கள் பாதியில் நிறுத்திவிட்டு பேருந்துகளை இயக்க மறுத்ததால் நடுவழியில் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
 
இதனால் மின்சார ரயில்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். வெளியூர் செல்லும் பேருந்துகள் இயங்காததால், வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
 
இதுகுறித்து பேசிய போக்குவரத்துத் அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிளாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகு வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் கேட்ட 2.57  மடங்கு சம்பள உயர்வுக்கு, 2.44 மடங்கு வழங்க ஒப்புக்கொண்டோம். மேலும் இனி பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு ரூ.16,800 வாக இருந்த ஆரம்ப நிலை சம்பளத்தை ரூ.17,700 அளவுக்கு உயர்த்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

அரசின் முடிவை சில தொழிற்சங்கள் ஏற்க மறுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்