93 வயதிலும் மல்யுத்தம் கற்றுத்தரும் பயில்வான் பழனி

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (17:49 IST)
மதுரையை சேர்ந்த பழனி என்பவர் தனது 93 வயதிலும் மல்யுத்தம் கற்றுக்கொடுத்து கொண்டிருக்கும் சம்பவம் தேசிய அளவில் மிகெப்பெரிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

மதுரையை சேர்ந்தவர் பழனி. இளமை வயதிலிருந்தே சிரந்த மல்யுத்த வீரராய் திகழ்ந்தவர். பல்வேறு மல்யுத்த போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். தமிழகத்தில் அழிந்து வரும் மல்யுத்த விளையாட்டை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்காக 1944ம் ஆண்டு மதுரையில் புதுயுக வாலிப திரேக பயிற்சி சாலை” என்ற அமைப்பை தொடங்கினார். இதன்மூலம் வாலிபர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்து கொள்ள உடற்பயிற்சிகளி மற்றும் மல்யுத்த விளையாட்டையும் பயிற்சி அளித்து வருகிறார்.

இவருடைய பயிற்சி சாலையின் சிறப்பம்சமே உடற்பயிற்சிக்கான நவீன இயந்திரங்கள் இல்லாமல் மரபு முறையில் பயிற்சி அளிப்பதுதான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது பயிற்சி சாலையில் நாள்தோறும் பயிற்சி பெறுகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று தலைமுறை மக்கள் இவரிடம் பயிற்சி பெற்று பல்வேறு இடங்களில் மல்யுத்தங்களில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

தற்போது 93 வயதாகிவிட்ட நிலையிலும் காலையில் சீக்கிரமே எழும் பழனி நாள்தோறும் உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். இதுகுறித்து பழனி “கடந்த 75 ஆண்டுகாலமாக நான் மல்யுத்தம் கற்றுகொடுத்து வருகிறேன். எனக்கு இப்போது 93 வயதாகிறது. இப்போதும் இளம்வயதில் இருந்த உடல் வலிமை அப்படியே இருக்கிறது. இப்போதும்கூட மல்யுத்தத்தில் ஈடுபடுகிறேன். மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்