9 வயது குழந்தை பலியான விவகாரம்! - ’எஸ்ஆர்எம் பள்ளி முதல்வர் கைது’

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (17:43 IST)
சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் என்ற மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 
இப்பள்ளி வளாகத்தின் 2-வது மாடியில் தொடக்க கல்வி வகுப்புகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இங்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லோக மித்ரா (9) , கடந்த 7 ஆம் தேதி பிற்பகல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். 
 
இதை அடுத்து, படுகாயம் அடைந்த மாணவி லோக மித்ரா, அருகே உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மாணவி லோக மித்ராவை பார்க்க அவரது தந்தை இளங்கோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், அம்மாணவி சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.
 
இந்நிலையில், காவல்துறையினர், மாணவியின் பெற்றோரிடம் தங்கள் மகள் தற்கொலை செய்துக்கொண்டதாக எழுதி தர வேண்டும் என நிர்பந்தப்படுதியதாக மாணவியின் பெற்றோர் காவல்துறையினர் மீது புகார் கூறியுள்ளனர்.
 
மேலும், எஸ்ஆர்எம் பள்ளியின் நிறுவனர் கைது செய்யப்படும் வரை மகளின் உடலை வாங்க போவதில்லை என மாணவியின் பெற்றோரும் உறவினரும் கூறியுள்ளனர்.
 
இதற்கிடையே, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது தாத்தா ராஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 
 
பள்ளியின் 4-வது மாடிக்கு சிறுமி லோகமித்ரா செல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், அவள் எதற்காக அங்கு சென்றாள் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், உண்மைகளை வெளியிடாவிட்டால், சம்மந்தப்பட்ட பள்ளி முன்போ அல்லது சிம்ஸ் மருத்துவமனை முன்பாகவோ தீக்குளிக்க போவதாகவும் அவர் கூறினார்.
 
இதை அடுத்து, மாணவி லோக மித்ரா உயிரிழந்தது தொடர்பாக எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவினால் லோக மித்ரா உயிரிழந்துள்ளதால், இப்பள்ளியின் முதல்வர் அமல்ராஜ் மற்றும் மேலாளர் பார்த்திபன் ஆகியோர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்