அதிமுக கூட்டணியில் ஒன்பது கட்சிகள்? விறுவிறுப்பாகும் தேர்தல் காட்சிகள்

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (07:25 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவும், திமுகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும், தொகுதி உடன்பாடு மற்றும் எந்த தொகுதியை எந்த கட்சிக்கு ஒதுக்குவது என்பது குறித்தும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

குறிப்பாக அதிமுக தரப்பில் கடந்த வாரமே குழு அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாக தெரிகிறது. தற்போது வந்துள்ள தகவலின்படி அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் கட்சி, ஏ.சி.சண்முகம் கட்சி, தனியரசு கட்சி ஆகிய எட்டு கட்சிகளும் அதிமுகவை சேர்த்து ஒன்பது கட்சிகள் இந்த கூட்டணியில் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

மேலும் அதிமுக 20 தொகுதிகளிலும் மீதி 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும்,  புதிய தமிழகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் கட்சி, ஏ.சி.சண்முகம் கட்சி, தனியரசு கட்சி ஆகிய கட்சிகளுக்குக் தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்