தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த 2 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அறிவிப்பின் படி சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.