10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ் தேர்வை எழுத 863 மாணவர்களுக்கு விதிவிலக்கு..!

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:07 IST)
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத மொழி வாரி சிறுபான்மை மாணவர்கள் விலக்கு வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தனர். 
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தமிழ் தேர்வு எழுத மொழிவாரி சிறுபான்மையை சேர்ந்த 863 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு விலக்கு அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து பிறமொழி பள்ளி மாணவர்களும் தமிழ் மொழி தேர்வை பொதுத் தேர்வில் கட்டாயம் எழுத வேண்டிய நிலை உள்ள நிலையில் இந்த ஆண்டு 863 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்