சூரப்பா எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் – நீதியரசன் கலையரசன் தகவல்!

திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:51 IST)
சூரப்பா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் 80 சதவீதம் விசாரணையை முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் மீது சமீபத்தில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் என்பவரது தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, அந்த விசாரணை ஆணையம் சூரப்பாவின் ஊழல்புகார் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூற்யிருந்ததது.

இந்நிலையில் இப்போது சூரப்பாவின் பதவிக் காலம் முடிந்துள்ள நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். புகார் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு மூன்று பேரிடம் மட்டுமே இறுதிகட்ட விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை பல்கலைக்கழகத்தில் ஆணையம் கேட்ட ஆவணங்கள் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்