மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

Siva
திங்கள், 23 செப்டம்பர் 2024 (15:31 IST)
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்பதனை உள்ளடக்கிய 8 நிபந்தனைகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

1. தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு வரும் கட்சித் தோழர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது.

2. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
3. சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

4. அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

5. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபடக்கூடாது.

6. கிணறு மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்தால் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

7. மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

8. பேருந்து மற்றும் வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்களை அழைத்து வர வேண்டும்.

இவ்வாறு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்