தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நடந்து வரும் நிலையில் அமைச்சர் கே.என்.நேரு கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்வி பதில், விவாதம் போன்றவை நடந்து வருகிறது. அதில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர் “சிங்கப்பூர் போன்ற பெரிய நாடுகளில் கழிவுநீரை சுத்திகரித்து தயாரிக்கப்படும் குடிநீரைதான் மக்கள் குடிக்கிறார்கள், ஆனால் நம் மக்கள் அது வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். 100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவுகள் நீங்கி 94 லிட்டர் நல்ல தண்ணீர் நமக்கு கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விவசாய பயன்பாட்டிற்கு அல்லது ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்புவதற்கு பயன்படுத்தலாமா என்பது மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முடிவு செய்யப்படுகிறது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K