சிறார் ஆபாசப் படம் பார்த்த 72 வயது சென்னை தாத்தா கைது

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:14 IST)
குழந்தைகளின் ஆபாச படத்தை பார்ப்பவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் ரவி அவர்கள் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து திருச்சியை சேர்ந்த ஒருவர் சிறுமிகளின் ஆபாச படத்தை பார்த்தது மட்டும் பகிர்ந்துதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 72 வயது மோகன் என்பவர் தனது மொபைல் போனில் சிறுமிகளின் ஆபாச படங்களை டவுன்லோட் செய்து வைத்திருந்தார் என்றும் அந்த படங்களை அவரது வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து வலுக்கட்டாயமாக பார்க்கும்படி கட்டாயப்படுத்தி தாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து வந்த புகாரின் அடிப்படையில் தற்போது 72 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோகன் என்ற அந்த முதியவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகளின் ஆபாச படங்களை டவுன்லோட் செய்தது மட்டுமின்றி இளம் பெண்களிடம் கொடுத்து அதை பார்க்க கட்டாயப்படுத்திய சென்னையை சேர்ந்த 72 வயது முதியவரால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்