திராவிட கட்சிகளின் தேர்தல் அறிக்கையை குப்பையில் தான் போட வேண்டும் என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்களின் விடுதலை சாத்தியமில்லை என்றும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை குறித்து தமிழிசை கூறியுள்ள கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சுவாமி, 'தமிழிசை ஒரு மாநில தலைவர், அவருக்கு டெல்லியில் உள்ள நிலைமை தெரியாது' என்று கூறினார். ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து டெல்லி தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களை அவ்வளவு எளிதில் விடுதலை செய்ய விடமாட்டோம்' என்றும் சுவாமி தெரிவித்தார்
மேலும் ஐந்து சீட் கொடுத்த கூட்டணிக்கு என்னால் பிரச்சாரம் செய்ய முடியாது. தனியாக போட்டியிட்டிருந்தால் நானே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்திருப்பேன் என்றும் சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமி, 7 பேர் விடுதலை குறித்தும் தமிழக பாஜக குறித்தும் கூறிய இந்த கருத்து தமிழக மக்கள் மற்றும் தமிழக பாஜக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.