ஆசிரியரை ரேகிங் செய்த பள்ளி மாணவர்கள்!! பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (11:52 IST)
சீன் காட்டுவதாக எண்ணி பள்ளி மாணவர்கள் 6 பேர் ஆசிரியரை கேலி செய்தது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வருடம் பள்ளிக்கு தாமதமாக வந்த பிளஸ்1 மாணவர்களை கண்டித்த தலைமை ஆசிரியரை அந்த மாணவர்கள் கத்தியால குத்தினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர்கள் தற்பொழுது  அதே பள்ளியில்  பிளஸ்2 படித்து வருகிறார்கள். இவ்வளவு பட்டும் திருந்தாத  அவர்கள், வகுப்பறையில் இருந்த ஆசிரியரை கேலி செய்தும், அவரை நாற்காலியில் உட்கார விடாமல் வம்பிழுத்தும் அட்டகாசம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு பந்தா காட்டினர். உயிருக்கு பயந்து அந்த ஆசிரியரும் மாணவர்களை எதுவும் செய்யவில்லை.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பவே, பள்ளி நிர்வாகம் 6 மாணவர்களை மன்னிக்கவும் ரௌடிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. இவன்களுக்கு இந்த தண்டனையெல்லாம் போதாது.  டிஸ்மிஸ் செய்தால் தான் இவன்களை மாதிரி பள்ளியில் அட்டகாசம் செய்பவன்கள் திருந்துவார்கள் என பலர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்