தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பி மற்றும் ஏஎஸ்பி இடமாற்றம்

வியாழன், 25 மார்ச் 2021 (16:43 IST)
தமிழகத்தின் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிக காலம் ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி வருகிறது 
 
சமீபத்தில்கூட நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் 55 டிஎஸ்பிக்கள் மற்றும் ஏஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவை டிஜிபி திரிபாதி அவர்கள் பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட 55 காவல்துறை அதிகாரிகளில் 33 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்