கோவை கலெக்டர் திடீர் மாற்றம்: காவல்துறை ஆணையரும் மாற்றம்!

புதன், 24 மார்ச் 2021 (16:33 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையமே நேரடியாக எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம் அதேபோல் கோவை மாவட்டம் காவல் ஆணையரையும் இடமாற்றம் செய்துள்ளது
 
கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நாகராஜன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் அதேபோல் கோவை மாவட்ட காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணி காரணமாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்