தமிழகத்தில் மீண்டும் 500ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகள் வருமா?

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (08:17 IST)
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த வாரம் வரை தினமும் 200க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 514 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 138 பேர்களும், செங்கல்பட்டில் 26 பேர்களும் கோவையில் 55 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 5866 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 366 பேர் நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது 3195 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் யாரும் பலியாகவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்