50 ரூபாய்க்கு சட்டை: முதல் நாளே கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (17:23 IST)
50 ரூபாய்க்கு சட்டை விற்கப்படும் என அறிவிப்பு செய்த புதிய துணிக்கடை ஒன்றினை முதல் நாளே அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விராலிமலை தெப்பக்குளம் என்ற பகுதியில் புதிதாக இன்று துணி கடை ஒன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக முதல் நாள் 50 ரூபாய்க்கு ஒரு சட்டை  வழங்கப்படுவதாக கடை நிர்வாகம் அறிவித்திருந்தது
 
இதுகுறித்த அறிவிப்பு கேட்ட பொதுமக்கள் 50 ரூபாய்க்கு சட்டை என்றவுடன் கடை முன் கூடினர். கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு வந்த போது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கொரோனா நோய் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியதாக கடைக்கு சீல் வைத்தனர் 
 
இதனால் புதிய கடை திறக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்