ஈரோடு கிழக்கு தொகுதியில் 40000 போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே வேட்பாளரை அறிவித்துவிட்டன. பாஜகவின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 40000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஜெயக்குமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்