கைக்குழந்தையை கடத்தி கத்தியால் கீறிய மர்மநபர்கள் : திருவள்ளூரில் பரபரப்பு

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (17:56 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மாத கைக்குழந்தையை மர்மநபர்கள் கடத்தி கத்தியால் கீறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் ஆட்டோ ஒட்டுநராக பணிபுரிகிறார். இவருக்கு குஷி என்ற 5 மாத கைக்குழந்தை உள்ளது. இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் படுத்துக் தூங்கிக் கொண்டிருந்தார்.
 
அப்போது மர்மநபர்கள் அவரது குழந்தையை கடத்தி சென்று கழுத்து மற்றும் காது பகுதிகளில் கீறி, அந்த குழந்தையை வீட்டிற்கு முன் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, குழந்தை வலியால் அழுதுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட அவரது பெற்றோர் குழந்தைக்கு வெட்டு காயம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனையடுத்து, அந்த குழந்தையை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்