ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்: 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பா?

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (15:24 IST)
இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமை திட்டத்தின்படி மாதம் ரூபாய் 1000 தொடங்க இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்த இறுதி கட்ட ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  
 
ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமை திட்டம் குறித்து செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில்  ரூ.1000 மகளிர் உரிமை திட்டத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் அதில் 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
செப்டம்பர் 15ஆம் தேதி தான் யார் யாருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவரும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்