இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்த தங்கம் விலை., வாங்குவதற்கு சரியான நேரமா?

சனி, 9 செப்டம்பர் 2023 (10:18 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளது.  
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5510 என்றும்  ஒரு சவரன் 44,080 என்றும் விற்பனையாகி வருகிறது. நேற்று தங்கம் சென்னையில் ஒரு சவரன் 44,240 என விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 5980 என்றும் எட்டு கிராம் 47840 என்றும் விற்பனையாகி வருகிறது. தங்கம் போலவே வெள்ளியின் நிலையம் இன்று சென்னையில் குறைந்துள்ளது. 
 
நேற்று ஒரு கிராம் 77.50 ரூபாய் என்றும் ஒரு கிலோ 77,500  என்றும் விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ 500 ரூபாய் குறைந்து 77 ஆயிரம் என விற்பனை ஆகி வருகிறது. 
 
தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதால் வாங்குவதற்கு சரியான நேரம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்