தமிழகத்தில் புதிதாக 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், இதனையடுத்து தமிழகத்தின் மொத்த பாதிப்பு 6,65,930 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,371 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் மேலும் 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு காரணமாக அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது
மேலும் தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 612,320 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது