சென்னை கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரன். இவரது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இடையே சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது. கே.கே.நகரில் உள்ள தனஞ்செயனின் அலுவலகத்திற்கு வந்த கணவன் – மனைவி இடையே தகராறு எழுந்துள்ளது. இருவரையும் சமரசம் செய்ய தனஞ்செயன் குறுக்கிட்டபோது அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.