உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக நேற்று தேசிய பேரியர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்தது..
இந்த நிலையில் சொன்னபடியே தேசிய மீட்பு படை உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு படையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும், உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்காளாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றதுடன் அவர்களுக்கு நிதியுதவியும் அறிவித்தார்.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன்,
''உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது.
17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.