அரக்கோணம் அருகே உள்ள ராமாபுரத்தில் உள்ள கிணற்றில் உடல்கள் மிதப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கிணற்றில் 4 மாணவிகள் குதித்து தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதி மக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மிதந்த 3 மாணவிகளின் உடல்களை மீட்டனர். மேலும் ஒரு மாணவியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளும் அரசு பள்ளியில் படிப்பவர்கள் என கூறப்பட்டுள்ளது. மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆசிரியர்கள் மாணவிகளை திட்டியதாகவும், பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.