மதுரையைச் சேர்ந்த அசோக் குமார், நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் அத்தை மகன். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைக் கவனித்துவந்த இவர், இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். நேற்று மதியம் திடீரென வளசரவாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதை அறிந்த அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இறந்த அசோக் குமாருக்கு வனிதா என்ற மனைவியும், சக்தி மற்றும் பிரார்த்தனா என்ற இரு மகள்களும் உள்ளனர்.