ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள சின்னகைனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன், சூர்யா, சந்தோஷ் ஆகிய மூவரும் கடந்த மாதம் 15 ஆம் தேதி அவர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் ஒரு தண்ணீர்ப்பாம்பை பிடித்துள்ளனர்.
இதையடுத்து, அந்தப் பாம்பை கொடுமைப்படுத்தி, அதை வாயில் வைத்து கடித்து இருதுண்டாக்கினர்.
அதை வீடியோ எடுத்ததுடன் இந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ பரவலான நிலையில், செனி வனத்துறை அலுவலகத்தின் சைபர் கிரைம் கண்ட்ரோல் பிரிவினர் ஆற்காடு வனச்சரகர் சரவணபாபுவுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, பாம்புவை கடித்துக் கொன்ற இளைஞர்கள் மூவர் மீதும் 4 பிரவுகளின் வழக்குப் பதிவு செய்து, ஆற்காடு வனச்சரக போலீஸார் கைது செய்தனர். அதன்பின்னர், அவர்களை ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.