பள்ளி சென்ற மாணவர்களுக்கு கொரோனா: அரசு என்ன முடிவெடுக்கும்?

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (09:29 IST)
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 
 
மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் சேலத்தில் இரண்டு மாணவ மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிக்ச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்