கட்சியில் இருந்து பலர் விலகினாலும் இருப்பவர்களை வைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார் டிடிவி தினகரன். உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வெற்றியை பதிவு செய்தது அமமுக. இது கட்சிக்குள் இருப்பவர்களுக்கு சற்று தெம்பை கொடுத்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கிடைக்காத சிலர் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், அமமுக சேர்ந்த மாநில அம்மா பேரவை தலைவர் புலவர் பி.எச்.சாகுல்ஹமீது, மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிங்கை பிரதீப்குமார், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் ஆர்.கோபிநாத் ஆகியோர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இது கட்சிக்குள் இருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிகிறது.