சமீபத்தில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, மீத்தேன் திட்டத்திற்கு அதிரடியாக ஆப்பு வைக்கும் வகையில் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது என மக்களுக்கு தேவையானதை, மக்கள் எதிர்ப்பார்ப்பதை செய்து வருகிறது அதிமுக.
குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று பார்டரில் பாஸ் ஆகாமல் மெரிட் அடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாம். இதற்காகத்தான் தற்போது முதலே களப்பணியை ஆரம்பித்துள்ளதாம். இதன் ஒரு பகுதியாக தன நான்கு நாட்களுக்கு ஆலோசனை கூட்டமும் நடத்தப்படுகிறதாம்.