வரும் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுகு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் அரசு மதுபானப் பார்கள் அரசு உத்தரவின் பேரில் திறக்கப்பட்டன. கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையொட்டி மதுபானப் பிரியர்களாள் சுமார் ரூ.300க்கு கல்லா கட்டியது.
இந்நிலையில், வரும் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுகு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதாலும், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதாலும், 28 ஆம் தேதி வள்ளலார் தினம் மற்றும் தைப்பூசம் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக மேலாண் இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.