கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அனலாக் 1, 2, 3 ஆகியவைகளில் ஏகப்பட்ட தளர்வுகளை மத்திய மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடைகள், ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு, இ-பாஸ் நடைமுறையை ஆகியவை இருப்பதால் அடுத்து என்னவென்பது தெரிவில்லை.
எனவே, 29 ஆம் தேதி ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறும். இதன் பின்னர் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இ=பா ரத்து செய்யப்படுமா அல்லது அமலில் இருக்குமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.