அதிரடியாக விலை குறைந்தது தங்கம்: இன்றைய நிலவரம்!

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (10:29 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை மெல்ல குறைந்து வந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. 
 
கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
 
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு சவரன் 39,800‬ ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 408‬ ரூபாய் குறைந்து 39,392 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து இன்று 51 ரூபாய் குறைந்து 4924 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்