தொடர் கனமழை: யாருக்கெல்லாம் எங்கெல்லாம் விடுமுறை??

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (08:34 IST)
மழை காரணமாக தமிழகத்தில் 28 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் மற்றும் புதுவை இடையே இன்று கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், அரியலூர், நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், சேலம், தேனி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், கோவை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்