தூய்மை பணிகளை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கே கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் மறுப்பு

Mahendran

செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (15:46 IST)
தூய்மை பணிகளை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கே கொடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுக்கப்பட்ட துப்புரவு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினருக்கே இப்பணியை வழங்க வேண்டும் என செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
 
தூய்மை பணிகளை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கே கொடுக்க வேண்டும் என எப்படி உத்தரவிட முடியும்? அது ஜனநாயகத்திற்கு எதிரானது. அப்படி ஒரு உத்தரவை வழங்க இயலாது  என நீதிபதிகள் தெரிவித்தனர்,
 
மேலும் மனுவில் அந்த கோரிக்கையை திருத்தம் செய்து தாக்கல் செய்வதாக மனுதாரர் உறுதியளிக்க, விசாரணை 2 வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்