வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் புறப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக போக்குவரத்துத் துறை 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த சிறப்பு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் பயணித்துள்ளதாக கூறியுள்ள போக்குவரத்துத் துறை திரும்ப வருவதற்கு 17 ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.